மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொண்டுசெல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு கஞ்சா கட்டுகள்,மூன்று கையடக்க தொலைபேசிகளை கொண்டுசெல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் சலவைக்காக போர்வைகளை வழங்கும் பகுதியில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரே போர்வைக்குள் வைத்து குறித்த கஞ்சா மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்த முற்பட்ட வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.