சீயோன் தேவாலய தற்கொலைக்குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுத்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ள மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அவ்வாறான எந்த நடவடிக்கையினையும் தான் எடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
அதிகாரிகளின் மத்தியில் உள்ள முரண்பாடுகளும் வினைத்திறனற்ற செயற்பாடுகளுமே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
எந்த சந்தர்ப்பத்திலும் குறித்த உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் புதைக்க நான் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.