2020ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்கும்போது பொதுமக்களின் கருத்துகளைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான திலகராஜ்,ஆஷ{ மாரசிங்க,விஜயபால ஹெட்டியாராட்சி,இஸ்மாயில்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் அதிகாரிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம்,மீன்பிடி,கல்வி,கால்நடை ஆகியவற்றின் அபிவிருத்திக்கு மேற்கொள்ளவேண்டிய பங்களிப்பு, கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு,வாழ்வாதாரம் ஆகியனவற்றிற்கு எதிர்கால வரவு செலவு திட்டம் மூலம் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.
என்ட பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டதுடன் அவற்றில் உள்ள குறைபாடுகளை குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது வரவு செலவு திட்டத்தின்போது மக்களினால் முன்வைக்கப்படவேண்டிய நிதி அறிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பெறப்பட்டதுடன் அவற்றினை உள்வாங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆட்சிக்காலத்திலேயே வரவு செலவு திட்டத்தினை தயாரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துகள் பெறப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த பொது அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.