கூழாவடி புனித அந்தோனியார் ஆலய நிறைவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவந்தது.

நேற்று சனிக்கிழமை மாலை திருவிழா நற்கருணை ஆராதனை நடைபெற்றதுடன் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கூழாவடி புதுமைபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை திருச்செல்வம் உட்பட அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.

இன்றைய திருவிழா இறுதித்திருப்பலியில் பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.