முடங்கிய மட்டக்களப்பு-ஆதரவாக முஸ்லிம் வர்த்தகர்ள.

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தகோரி கிழக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தகோரி பல ஆர்பாட்டங்கள் மற்றும் சாகும் வரை உண்ணாவித போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கிழக்கு மாணவர் பேரவை என்னும் அமைப்பு துண்டு பிரசுரங்கள் மூலம் விடுத்த அழைப்பினையேற்று இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு நகரம் முற்றாக முடங்கியதுடன் முஸ்லிம் வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக வர்த்தக நிலையங்களை மூடியிருந்ததை காணமுடிந்தது.

போக்குவரத்துகள் வழமைபோன்று இயங்குகின்ற அதேவேளையில் மட்டக்களப்பு பொதுச்சந்தையும் இயங்கும் நிலையிலும் மக்கள் தொகை குறைவான நிலையிலேயெகாணப்படுகின்றது.

அலுவலகங்கள் இயங்குகின்றபோதிலும் மக்கள் வருகையில்லாத காரணத்தினால் அலுவலகங்கள் வெறிச்சோடிக்காணப்படுகின்ற நிலையே உள்ளது.