மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

ஆரையம்பதி பொதுவிளையாட்டு மைதானத்தில் மின்னொளி தொகுதி

மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட ஆரையம்பதி பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட மின்னொளி தொகுதி நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

இரவு வேளைகளிலும் இளைஞர்கள் விளையாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மின்னொளி தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென கம்பிரலிய ஊரக எழுச்சி திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் 10இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த மின்னொளி தொகுதி திறப்பு விழா ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பிரேம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களும் ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இதன்போது ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.