உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோர்க்கு மட்டு நகரில் அஞ்சலி.


 உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடிய பயங்கரவாதிகளின் ஈனத் தாக்குதலால்      உயிர் நீத்த உறவுகளுக்கான 31ம் நாள் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு குமாரத்தன் முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது .

கடந்த 21.04.2019ம் திகதியன்று சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் உயிர் நீத்த  உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டியும் காயமடைந்த  உறவுகள் விரைவில் பூரண குணமடைய வேண்டியும் 31ம் நாள் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் விசேடபூசையும் தாகசாந்தி நிகழ்வு ஜெயந்திபுரம், மட்டக்களப்பு குமாரத்தன் முருகன்ஆலயத்தில் இடம் பெற உள்ளது .

நேரம் - பி.ப 5.00 மணி

காலம் - 21.05.20 19 (செவ்வாய்க்கிழமை)

ஏற்பாட்டு குழு - இருதயபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் குமாரத்தன் ஆலயம் ஜெயந்திபுரம் .