போரதீவுப்பற்று பாலர்பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டமும் வைத்திய சிகிச்சை முகாமும்

 (எஸ்.நவா)

மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வுடன் அவர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமும் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் கிழக்pலங்லகை. இந்து சமய சமுக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஸ்யந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினரால் நிக் அன்ட் நெல்லி நிதி அனுசரணையில் போரதீவு பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து; களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய சிகிச்சை முகாம் முன்னின்று நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தினை  சிறப்பிப்பதற்காக இவர்களுடன் பல சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் சேர்ந்து பங்களிப்பினை நல்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கிழக்கின் கரங்கள், நாம் தமிழர் அமைப்பினர், பாலர் பாடசாலைகள் ஆகியன பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை முன்பள்ளி மாணவர்களுக்காக பாடசாலை உபகரணங்களும் உணவுப்பொதிகளும்  அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் திட்டத்தில் மூன்று முன்பள்ளி பாடசாலைகளுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் உத்தியோக பூர்வமாக அதிதிகள் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 
இந் நிகழ்வில் அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளரும் முன்பிள்ளை வைத்திய ஆலோசகரும் சமூக சேவையாளருமான வைத்தியர் அருளானந்தம்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சுகுணன், போரதீவு பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் குணராசசேகரம் போரதீவு பற்று உதவி பிரதேச செயலாளர் திரு.புவனேந்திரன், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளர். திரு. பாலச்சந்திரன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் திரு.சி.தணிகசீலன் மற்றும் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.