மட்டக்களப்பு வேலையற்ற இளைஞர் யுவதிகள் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா சிறந்த வழிகாட்டி -ஹரிதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான சிறந்த வழிகாட்டியாக சுமார் லங்கா அலுவலகத்தினை பயன்படுத்தமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.ஹரிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களின் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா (ளுஅயசவ டுயமெய) எனும் இலங்கை தொழில் வழிகாட்டல் அலுவலகம் இன்று காலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் எதிர்கால நலன்கருதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரின் வேண்டுகோளின் பேரில் இன்று மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ ஹிஸ்வுல்லா மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.ஹரிதரன் கிரி மட்டக்களப்பு மாநகரஇபிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.ஹரிதரன்,மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான இளைஞர் யுவதிகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த ஸ்மார்ட்  ஸ்ரீலங்கா அலுவலகத்தினை பயன்படுத்தமுடியும்.பல்வேறு தொழில்வாய்ப்புகளை பெறுதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.