குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழப்பு –கொல்லப்பட்டவர்கள் 29ஆக அதிகரிப்பு

மட்டக்களப்பில் இன்று காலை தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 29ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்றல் வீதியில் உள்ள சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.05மணியளவில் உதித்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிணை கொண்டே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும் அதனை தற்கொலை தாரியொருவர் கொண்டுவந்து தாக்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பில் இருந்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
69பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் இன்று மாலை இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.