அமிர்தகழி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் ஜீர்னோத்தாரண புனராவர்த்தன,அஷ்டபந்தன நவகுண்ட பக்ஸ மஹா யாக மஹா கும்பாபிசேக பெருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையானமும் பிரசித்திபெற்றதுமான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.

நேற்று சனிக்கிழமை அடியார்கள் பால்காப்பு,எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வுகள் வெகுவிமர்சiயாக நடைபெற்றன.

பிள்ளையார்,முருகன் உட்பட பல்வேறு பரிபாலமூர்த்திகளைக்கொண்டதாக அழகிய ஆலயமாக பரிணானமம் பெற்றுள்ள அமிர்தகழி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு வேதாகம சக்ரவர்த்தி,சிவாகம கலாநிதி சிவஸ்ரீ ஆதி.சௌந்தரராஜக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

நேற்று வேதபாராயணம்,புண்ணியாகவாசனம் யாகபூஜை,உபசார ஹோமம்,பூரணாகுதி,தீபராதனை,வேதத்திருமுறை பராயணம்,நிருத்தியாஞ்சலி,சர்வாஞ்சலி சமர்ப்பணம் நடைபெற்று பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பரிபால தெய்வங்கள் மற்றும் பிரதான தூபிகள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மேளதாளங்கள் முழங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்தியாகிய மகா மாரியம்மனுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து யந்திரஸ்தாபனம், விம்பஸ்தாபனம், தசமங்கள தரிசனம்,எஜமான அபிசேகம் என்பன நடைபெற்று அடியார்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஹா கும்பாபிசேக பெருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 14 நாட்களுக்கு மண்டலாபிசேக பூஜைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.