கல்லடி முகத்துவாரம் பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு,கல்லடி முகத்துவாரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.

கல்லடி முகத்துவாரம்,திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன.
உதவும் உள்ளங்கள் விரூட்சம் அமைப்பின் உதவியுடன் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

உதவும் உள்ளங்கள் விரூட்சம் அமைப்பின் தலைவரும் வீடமைப்பு தேசிய அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர் ஓஜான்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவையாளர் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 55மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.