போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் 2019ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு


 
(படுவான் எஸ்.நவா)

போரதீவுப்பற்று  பிரதேச செயலகத்தில் 2019ம் ஆண்டு அலுவலக தினத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்  பணிப்புரைக்கமைய இன்று (01) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலாளரும் நிறுவனத்தின் தலைவருமான இ.ராகுலநாயகி தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முதலில் தேசியகொடி பிரதேச செயலாளர் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டதுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டது அதன்பின்னர் உயிர்நீத்த வீரர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
அரச அலுவலர்கள் சகலரும் அரசாங்க சத்தியக் கூற்றுக்களை உரத்து வாசித்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் 

தொடர்து பிரதேச செயலாளரினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால்  2019ம் ஆண்டு போதைப் பொருட்களற்ற  சுற்றாடல் நேயமிக்க மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் நிலைபேறான விவசாய அபிவிருத்தி; அடைந்து கொள்ளும் நிகழ்சித்திட்டங்களை அலுவலர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் நேர்மையாகவும் தாமதமின்றியும் மிகுந்த அற்பணிப்புடனும் வழங்கவேண்டிய அவசியத்தினையும் உரையில் இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்து 2018ம் ஆண்டில் இடம்பெற்ற அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து வேலைதிட்டங்களையும் வெற்றிபெற செய்வதற்கு அனைவரும் மிகவும் அற்பணிப்புடன் சேவையாற்ற வேண்டிய அவசியத்தினையும்; கூறியதோடு புத்தாண்டு வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டனர் 

இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவினால் வறிய பாடசாலை செல்லும் ஜம்பது மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளும் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேசசெயலக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்