சைனிங் ஸ்டார் முன்பள்ளியின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்  முன்பள்ளியின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் மிகச்  சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் திருமதி.அருந்ததி சுவர்ணராஜ்  அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக வைத்தியர் சுசிகலா பரமகுருநாதன் அவர்களும், சிறப்பு அதிதியாக திருமதி.ஹிந்து ரோஹாஸ் குமாரசாமி அவர்களும்  கலந்துகொண்டனர்.இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அவை அங்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்வனவாக இருந்தன.இந்த நிகழ்வின்போது எதிர்வரும் தை மாதம் தரம்  ஒன்றிற்கு பாடசாலை  செல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன் தற்போதுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெற்றோர்,மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்கலென என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.