பாலன் பிறப்பினை சிறப்பித்த சின்ன உப்போடை புனித லூர்து அன்னை ஆலயம்

பாலன் பிறப்பினைக்குறிக்கும் விசேட வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுகள் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

மட்டக்களப்பு,சின்னஉப்போடை புனித லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்மஸ் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை போல் சற்குணநாயம் அடிகளார்,அருட்தந்தை அனஸ்டி அடிகளார் இணைந்து இந்த திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

இதன்போது நாட்டில் நீடித்த சமாதானமும் அமைதியும் நிலவவேண்டும் என்றும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

அத்துடன் ஜேசு பிறப்பினை கொண்டாடும் வகையில் பல்வேறு பரிசுப்பொருட்களும் சிறுவர்,சிறுமியர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

கிறிஸ்துபிறப்பு ஆராதனையினை தொடர்ந்து ஒவ்வொருவரும் ஏனையவர்களுடன் கிறிஸ்மஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.