போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

  படுவான் (நவா)

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கா போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் தனதுரையில் எதிர்வரும் காலங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது ஒரேயளவேதும் எங்களது சமூகமக்களை பாதுகார்த்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகளை தேடிக்கொள்ளவேண்டும் என்பது எல்லோரது அவிப்பிராயமாகவுள்ளது. அதைத்தான் அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும் எங்கள் கைகளை மீறியதொரு செயல்பாடாகத்தான் அனர்த்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அனர்த்தங்கள் ஏற்படாதவாறு தவிர்த்துக்கொள்வது ஏற்றவகையில் பாதுகார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அனைத்து உயிர்களுக்கும் ஆத்மா சாந்திபெற வேண்டுமெனவும் தனதுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது முக்கிய அம்சமாகும்.