வாழைச்சேனை பிரதேசத்திற்க்கான, பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை குழு தெரிவு.
கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேசத்திற்க்கான, பிரதேச  இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழுவிற்கான புதிய நிருவாகிகள் நேற்று புதன்கிழமை (26.12.2018) தெரிவு செய்யப்பட்டனர்.

பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர்  திரு வ .வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் ஆகியோருடன் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அனைத்து வெளிக்கள உத்தியோகஷ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

    வாழைச்சேனை  பிரதேசத்திற்க்கான, பிரதேச  இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை குழுவிற்கான தலைவராக பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் அவர்கள் நியமிக்கப்பட,

 உபதலைவராக திரு  எஸ்.சிவானந்தராசா அவர்களும்,

செயலாளராக த.சபியதாஸ்  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.