தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு


 (லியோன்)

வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய ரீதியில் விசேட  நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன


மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்துடன் இணைந்து  தேசிய வாசிப்பு மாதத்தினை  சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு ஆற்றல் திறன்களை  மேம்படுத்தும் வகையில் .பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன

இதற்கு அமைய மாதத்தின் இறுதி நாளான இன்று இறுதி நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது .இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்துகொண்டார்

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வாக “இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  தேசிய வாசிப்புமாத சிறப்பிதழ்கள் வெளியீட்டு வைக்கப்பட்டன

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தினால் அறிவுச்சுரங்கம் எனும் சிறப்பிதழும் , புதூர் பொது நூலகத்தினால் புதுநகரின் புது  ஒளி எனும் சிறப்பிதழும் , அரசடி பொது நூலகத்தினால் , தேன்துளி எனும் சிறப்பிதழும் ,கல்லடி பொது நூலகத்தினால் அறிவுப் பூங்கா எனும் சிறப்பிதழ்களும் வெளியீடு வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார்  இந்த சிறப்பிதழ்களை வெளியிட்டு வைத்தார் .

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் மற்றும் மாநகர  சபை உறுப்பினர்கள் , மாநகர சபை  பொது நூலக உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்

,.