நுளம்புக்கான புகை விசிறி கருவிகள் கையளிக்கும் நிகழ்வு


  
(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவகத்துடன் இணைந்து அம்கோர் நிறுவனம்  டெங்கு நுளம்பு பெருக்கத்தினை  கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது


இத்திட்டதினூடாக நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தல் செயற்பாடுகளை  முன்னெடுப்பதற்காக  சுமார் 1.8  மில்லியன் ரூபா பெறுமதியான நுளம்புக்கான புகை விசிறி கருவிகள்  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது  

உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கிரேஸ் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் அம்கோர் நிறுவன பணிப்பாளர் ப .முரளிதரன், அம்கோர் நிறுவன நிகழ்ச்சி திட்டமுகாமையாளர் எஸ் சிவயோகராஜன் மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவை அலுவலக அதிகாரி வைத்தியர் அச்சுதன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனை உத்தியோகத்தர்கள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் ,கலந்துகொண்டனர்