திணைக்களங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி –மட்டு.கல்வி வலயம் சம்பியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுக்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலய அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுக்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிக்கு இணைவாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெபர் விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் ஈஸ்பரன் தலைமையில் ஆரம்பமான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த சுற்றுப்போட்டியில் பொலிஸ் திணைக்களம்,மாவட்ட செயலகம்,கல்வித்திணைக்களம்,பிரதேச செயலகம் உட்பட எட்டு திணைக்களங்களில் இருந்து எட்டு கழகங்கள் பங்குபற்றுகின்றது.

இந்த சுற்றுப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக அணியும் மோதிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 21-07 என்ற புள்ளியடிப்படையில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.

முன்னெடுக்கப்புடும் விளையாட்டு நிகழ்வுகளைத்தொடர்ந்து எதிர்வரும் 22ஆம் திகதி மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.