மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டு-மின்சார சபையின் 49வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்


(லியோன்)

இலங்கை மின்சார சபையின் 49வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை காரியாலயங்களில் விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றன 


 இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியிலாளர் காரியாலயத்தில் மாபெரும் இரத்ததான  நிகழ்வும் தொடர்ந்து 49வது ஆண்டு நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில்  வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது .

பிரதேச பிரதம மின் பொறியிலாளர் திருமதி . அனிதா பரமானந்தராஜா தலைமையில் நடைபெற்ற .இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியிலாளர் காரியாலய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார  வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவின் பொறுப்பதிகாரி  வைத்தியர்  பிரபா சங்கர் மற்றும்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்