சிறுவர் உளநல நட்புதவியாளர்களுக்கான 48 மணித்தியாலங்கள் கொண்ட ஆறு நாள் செயலமர்வு


 (லியோன்)

சீடாஸ் ஸ்ரீ லங்கா கனடா  நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டி மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி ஆசியர்களுக்கான  சிறுவர் உளநல நட்புதவியாளர்களுக்கான 48  மணித்தியாலங்கள் கொண்ட ஆறு நாள் செயலமர்வு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் உளநல நட்புதவியாளர்கள் தொடர்பாக  நடாத்தப்பட்ட செயலமர்வில் வளவாளர்களாக முதன்மை உளவள துணையாளரும் , முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவி கல்விப்பணிப்பாளர் எம் .புவிராஜா ,குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் திருமதி .சித்திரா வாமதேவன் ,முதன்மை உளவள துணையாளர் கே  .ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்  

முன்பள்ளி சிறுவர் உளநல நட்புதவியாளர்களுக்காக ஆறு நாட்கள் நடாத்தப்பட்ட செயலமர்வின்  இறுதி நாளான இன்று  ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன்  , சீடாஸ் ஸ்ரீ லங்கா கனடா  நிறுவனத்தின்  செயளாலரும் ,ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான எ .சுகுமாரன் , வலயக்கல்வி அலுவலக ( கணிதம் ) உதவி கல்விப்பணிப்பாளர்  வை .சிறிதரன் ஆகியோர்   கலந்துகொண்டனர்