வை எம் சி எ நிறுவன சிறுவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் வாழ்வோசை பாடசாலை மற்றும் வை எம் சி எ  நிறுவன சிறுவர்களின்  சிறுவர் தின நிகழ்வு சங்கத்தின் தலைவர் வி .தர்ஷன் தலைமையில் இன்று மாலை வை எம் சி எ மண்டப முன்றலில்  நடைபெற்றது
 

ஆரம்ப நிகழ்வாக  நிகழ்வுக்கு வருக தந்த அதிதிகளுடன் சிறுவர்கள் இணைந்து பலூன்கள் பறக்கவிட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்

சர்வதேச சிறுவர் தின நிகழ்வை சிறப்பிக்கும் வகையில்  சிறுவர்களுக்கான சித்திரப்[போட்டிகள் , பாடல் போட்டிகள் , வர்ணம் பூசுதல் போன்ற வினோத போட்டி நிகழ்வுகளும்  இடம்பெற்றது

இதன்போது  போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட வேல்ட் விசன் நிறுவனத்தினால் வாழ்வோசை பாடசாலை சிறுவர்களுக்கு பேன்ட் வாத்திய இசை கருவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினம் நிகழ்வில் மட்டக்களப்பு வை எம் சி எ நிறுவன பொதுசெயலாளர் ஜெகன் ஜீவராஜ் , வை எம் சி எ நிறுவன உறுப்பினர்கள் , வேல்ட் விஷன் நிறுவன  உத்தியோகத்தர்கள் , வாழ்வோசை பாடசாலை மாணவ சிறார்கள், ஆசிரியர்கள்  ,பெற்றோர்கள் என பலர்  கலந்துகொண்டனர்