கிருஸ்ணரின் பிறப்பால் களைகட்டிய மட்டக்களப்பு

ஸ்ரீ கிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று உலகெங்கும் பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

பூவுலகில் எப்போது தர்மம் தலை சாய்ந்து, அதர்மம் தலை தூக்குகின்றதோ, அப்பொழுது, தர்மத்தை நிலைநாட்ட சிஷ்ட பரிபாலனாக ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார்.

அதன்படி, ஸ்ரீ மகாவிஷ்ணு, தட்சிணாயனத்தில் ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீகிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அகில இலங்கை கிருஸ்ண பக்தி கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் ஸ்ரீ கிருஸ்ண ஜெயந்தி தின நிகழ்வு சிறப்பாக நேற்று மாலை நடைபெற்றது.

சொற்பொழிவு ஆச்சாரியா,கீர்த்தனை,பஜனை என்பன இதன்போது நடைபெற்றதுடன் விசேடமாக மாணவிகளின் பல்வேறு நாட்டிய நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,கிழக்கு மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிருஸ்ணருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.