வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ வயற்கரை விநாயகர் ஆலய ஜீர்னோந்தாரண அஷ்டபந்தன நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

இயற்கை எழில் கொஞ்சும் இலங்காபுரியின் கிழக்கே மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்று நல்விருந்து ஓம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங்காலமாக கோயில் கொண்டு வரும் அடியார்கள் வினைகள் களைந்து அருள் சுரக்கும் வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ வயற்கரை விநாயகர் ஆலய ஜீர்னோந்தாரண அஷ்டபந்தன நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நிகழும் மங்ககரமான விளம்பி ஆண்டு ஆவணி மாதம் 06ம் நாள் (22.08.2018) புதன்கிழமை பகல்10.00 மணி முதல் 11.20 மணி வரை வரும் விருட்சிக லக்கிண சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.


ஆரம்பம்:- 20.08.2018 (திங்கட்கிழமை) 
எண்ணைக்காப்பு:- 21.08.2018 (செவ்வாய்க்கிழமை)
மஹா கும்பாபிஷேகம்:- 22.08.2018 (புதன்கிழமை)


எனவே பக்த அடியார்கள் அனைவரும் பக்திசிரத்தையோடு ஆசாரசீலர்களாக  எண்ணைக்காப்பு மற்றும் கிரியை வழிபாடுகளில் கலந்துகொண்டு பெருவிழாவினை சிறப்பித்து எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்
ஆலய நிர்வாக சபை