மாற்றுத்திறனாளிகள் இருவரின் வாழ்வதரத்திற்கு உதவி செய்தார் கணேசமூர்த்தி கோபிநாத்.


பட்டிப்பளை பிரதேசத்தின் அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த துவிச்சக்கர்வண்டி திருத்தும் கடை யினை நடத்திவரும் மாற்றுத் திறனாளிகள் கோகுலன்இ ஜெகநாதன் இருவரினையும் கடந்த வாரம் சென்று நேரடியாக சந்தித்திருந்த கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும் இ தேசிய ஒருமைப்பாடு இ நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளருமாகிய கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களிடம் மேற்படி இருவரும் விடுத்த கோரிக்கையினை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் (27.07.2018)இருவருக்கும் காற்றடிக்கும் மின் இயந்திரம் மற்றும் துவிச்சக்கரவண்டி திருத்தும் சாதனங்கள் என்பன கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. 


படுவான்கரைப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக கல்வி மூலம் இளம் சமுதாயத்தினை கட்டியெழுப்பும் பணியில் பல வருடமாக இலவச கருத்தரங்குகளை நடாத்திவரும் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்கள் இவ்வாறான சேவைகளை இனங்கண்டு நேரடியாக செய்வது அல்லலுறும் எமது சமூகத்திற்கு பெரிதும் பயனுடைய விடயமாக அமைகின்றது.