செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் குழப்பம்.

செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவரால் குழப்பம்… இது தொடர்பில் மாவட்டப் பணிப்பாளரிடம் முறைப்பாடு…

(உறுகாமத் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் - கே.புவிநாயகம்)

செங்கலடி உறுகாமத் திட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இடைப்போகம் சம்மந்தமான கலந்துரையாடலின் போது ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளரிடம் இன்றைய தினம் (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறுகாமத் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் கே.புவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை செங்கலடி உறுகாமத் திட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் பொறியியலாளர் தலைமையில் இடம்பெற்ற இடைப்போகம் சம்மந்தமான கலந்துரையாடலின் போது முன்னாள் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் மகேந்திரராசா அவர்கள் கலந்துரையாடலைக் குழப்பி பெருமாவெளி அமைப்பினருடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தற்போதைய திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவராகிய நான் கட்டுப்படுத்த முனைந்த போது என்னைக் கதிரையால் தாக்க முற்பட்டதோடு அவரைக் கட்டப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லையென்றவாறு முறுகல் நிலையைத் தோற்றுவித்தார்.

எனவே இவர் தொடர்பில் பள்ளத்துவெளி அமைப்பினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏனைய அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 அது மட்டுமல்லாது இவ்விடயத்தைப் பெரிது படுத்த வேண்டாம் என பொறியிலாளர் கூறியதற்கமைவாக அமைதியாக இருந்தோம்.

 ஆனால்இவ்விடயம் தொடர்பில் இதுவரை பெறியியலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இது தொடர்பில் இன்றைய தினம் (06) நீர்ப்பாசனத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஐயா அவர்களிடம் விளக்கம் அளித்து இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.