(லியோன்)
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தில் விசேட பொலிஸ் பிரிவில் வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவந்த டொலி என்ற எழுவயதுடைய நாய் இருதய நோயினால் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தில் விசேட பொலிஸ் பிரிவில் வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவந்த டொலி என்ற எழுவயதுடைய நாய் இருதய நோயினால் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
2010 .10.31 திகதி நெதர்லாந்து நாட்டில் பிறந்த இந்த நாய் 2011ஆம்
ஆண்டு இலங்கை கண்டி பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டு 2011.09.27 ஆம்
திகதி முதல் 86802 என்ற பொலிஸ் இலக்கமுடைய பொலிஸ் கொஸ்தாபல் தர்ஷன் என்பவரால் வெடி
மருந்து பொருட்கள் தேடும் நடவடிக்கையில் பத்து மாதகாலம் நாய்க்கு விசேட பயிற்சிகள்
அளிக்கப்பட்டு 2012.10.30 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டதாக
பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த நாய்
விசேட பொலிஸ் பிரிவில் வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில் 7
வருடங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்
இந்த எழு வருட கால பகுதியில் நாட்டின் ஜனாதிபதி ,பிரதம மந்திரி
மற்றும் விசேட அரச தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகையின்
போது விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 200 மேற்பட்ட
வெடி மருந்து பொருட்கள் தேடும் விசேட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
இவ்வாறு மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு விசேட பொலிஸ் பிரிவுடன்
இணைந்து செயல்பட்ட டொலி என்ற நாய் இருதய
நோயினால் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
இதனை மதம் அனுஸ்டானங்களுடனும் , பொலிஸ் மரியாதையுடனும் இன்று
மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக விடுதி
வளாகத்தில் அடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது .
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஐ பி . எ .எம் .என் . பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு விசேட பொலிஸ் பிரிவு
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்