(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒன்றிப்புக்கான இரத்த தான நிகழ்வு இன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது .
தேசிய இளைஞர் சேவை அதிகாரியும் , சர்வமத அங்கத்தவருமாகிய திருமதி
.பிராசாந்தி பிரியதர்ஷனின் முதலாவது ஆண்டு நினைவை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள்
மன்ற மாவட்ட காரியாலயம் ,எகெட் சர்வமத ஒன்றியம் , மாவட்ட இளைஞர் கழகங்களின்
சம்மேளனம் மற்றும் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையில் நடாத்தும் இன ஐக்கியத்துக்கான
இரத்த தான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்தில்
நடைபெற்றது
மட்டக்களப்பு தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த
இரத்ததான முகாம் நிகழ்வில் , மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான
திருமதி .நிசாந்தி அருள்மொழி , திருமதி
.கலாராணி யேசுதாசன் .மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
இரத்த வங்கி பிரிவு வைத்தியர் வைத்தியர்
கே .விவேக், வைத்தியசாலை தாதிய
உத்தியோகத்தர்கள் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ,எகெட் சர்வமத ஒன்றியம் , மாவட்ட இளைஞர்
கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள்
,மற்றும் பிரதேச இளைஞர், யுவதிகள் தேசிய
இளைஞர் சேவை அதிகாரியும் , சர்வமத அங்கத்தவருமாகிய திருமதி .பிராசாந்தி
பிரியதர்ஷனின் குடும்ப
அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்