மட்/ புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு…


மட்/ புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய 2018ம் ஆண்டுக்கான மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (06) பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவ தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 2018ம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களினால் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இதே வேளை தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கு கடந்த 02ம் திகதி மாணவ தலைவர்களுக்கான ஒழுக்க விழுமியங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய செயலமர்வும் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.