ஒழுங்கான நீர்ப்பாய்ச்சல் இன்மையால் மீண்டும் மீண்டும் பாதிப்பை எதிர்கொள்ளும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச விவசாயிகள்



கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிரான்புல்சேனை மண் அணைக்கட்டு உடைப்பெடுத்தது.

 இதனால் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெருவெளி, குளத்துவெட்டை, சின்னவெளி சின்னாளம்வெளி, புதுவெளிக் குளத்துவட்டை ஆகிய கண்டங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் நீர்ப்பாய்ச்சல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகின.

 இதனால் அக்கண்டங்களின் விவசாயிகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கினர்.

இது தொடர்பில் இக் கிரான்புல் மண் அனைக்கட்டினை புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் பலதரப்பட்டவர்களிடம் கோரியிருந்தனர்.

இது தொடர்பில் மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் நீர்ப்பாசனத் திணைக்களம் இவ்வணைக்கட்டினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வணைக்கட்டினை அமைப்பதாயின் சுமார் 02 மில்லியன்கள் தேவைப்படும் எனவே தொடில்சோலை சந்தி தொடக்கம் சித்தாண்டி வரையுள்ள வாய்க்காலை புனரமைத்து வாய்க்கால் மூலம் நீர்வழங்கமுடியும் இதற்கு அதிகளவு செலவு எற்படாது என்று தெரிவித்து இவ்வாய்யகாலைப் புனரமைப்புச் செய்தது.

இதற்காக மேற்படி பிரதேசத்தில் இருக்கும் மக்களால் நடுகை செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிக்கப்பட்டு இவ்வாய்க்கால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரைக்கும் இப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை.

இம் மரங்கள் வெட்டப்பட்டமை தொடர்பில் வன வனத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் அறிவார்களோ தெரியவில்லை.

 இது தொடர்பில் இப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடப்படவும் இல்லை. குறைந்த செலவில் வாய்க்கால் வேலை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் தற்போது நடக்கின்ற விடயங்களைப் பார்த்தால் கிரான்புல் மண் அணைக்கட்டினை அமைப்பதற்கு எற்படும் செலவை விட வாய்க்கால் அகழ்விற்கு அதிகம் செலவு ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி விவசாயிகள் விசனம் தொவித்தார்.

அதுமட்டுமல்லாது இவ்வாய்க்கால் அமைக்கப்பட்டும் கூட மேற்கூறப்பட்ட விவசாயக் கண்டங்களுக்கு முழுமையாக நீர்ப்பய்ச்சல் இடம்பெறவில்லை மீண்டும் மீண்டும் விவசாயிகள் நட்டம் அடையும் நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறு வாய்க்கால் அமைத்து முழுமையான நீர்ப்பய்ச்சலை மேற்கொள்ள முடியாது, கிரான்புல் அணைக்கட்டினைப் புனரமைத்தால் மாத்திரமே முழுமையான நீர்ப்பாய்ச்சலை மேற்கொள்ள முடியும் என விவசாயிகளால் பலமுறை தெரிவிக்கப்பட்டும் விவசாயிகளின் கருத்துக்களை மீறி இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

 நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இருக்கின்றதா அல்லது அதிகாரிகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்படுகின்றதா என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.