சிவானந்தா தேசிய பாடசாலையில் கண்காட்சி

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாபெரும் கண்காட்சி நேற்று ஆரம்பமானது.

ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல்கற்பித்தல் செய்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்ப பிரிவும் பாடசாலையின் மாணவர்களினால் இந்த கண்காட்சியை ஏற்பாடுசெய்திருந்தனர்.

பாடசாலையின் அதிபர் த.யசோதரன் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது 25க்கும் அதிகமான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் விஞ்ஞானம்,கணிதம்,விவசாயம்,இசை,இன நல்லுறவு உட்பட பல்வேறு அம்சங்களை தாங்கியவாறு கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியானது இன்று செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறவுள்ளதுடன் இந்த கண்காட்சியை காண்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் இருந்து பாடசாலை மாணவர்கள் வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.