ரோட்டரி கழகத்தின் 2018 -2019 ஆண்டுக்கான தலைவர் பதவி பிரமாண நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு   ரோட்டரி கழக  ஆண்டு நிறைவு நிகழ்வும்  2018 -2019 ஆண்டுக்கான புதிய ரொட்ரி கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தின்  மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் 59 வது     ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்திற்கான  2018 -2019  ஆண்டுக்கான புதிய தலைவருக்கான பதவி பிரமாண நிகழ்வும்  ரோட்டரி  கழக  தலைவர்   எஸ் .சங்கரலிங்கம்  தலைமையில் (  28 ) மாலை பயினியர் வீதியில் உள்ள ரோட்டரி கழக மண்டபத்தில்  நடைபெற்றது . 

ஆரம்ப நிகழ்வாக  ரோட்டரி கழக உறுப்பினர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர் .இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களின்  புதிய அங்கத்தவர்கள்  அறிமுக  நிகழ்வுகளும் தொடர்ந்து  ரோட்டரி  கழக  அங்கத்தவ நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .இதனை தொடர்ந்து 2018 -2019 ஆண்டுக்கான புதிய  ரோட்டரி  கழக தலைவராக வி பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் கே இ .கருணாகரன் மற்றும் ரோட்டரி கழக தலைவர்கள் புதிய    உறுப்பினர்கள்  பெண் ரோட்டரி கழக  உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,