மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதிக்கான காபட் இடும் பணிகள் ஆரம்பம்,


 …(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபையினால்  நகர அபிவிருத்திக்காக நிதிகள்  ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதிகளில்  வீதி  அபிவிருத்தி  புனர்நிர்மானம் மற்றும் மாநகரை முதன்மை படுத்தும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
 

இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர முதல்வரின்  பணிப்புரைக்கு அமைவாக  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி காபட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

கிழக்கு மாகான  வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  8 மில்லியன் ரூபா  நிதியில்   500 மீட்டர் வரையில்  குறித்த வீதிக்கான   காபட் இடும் ஆரம்ப நிகழ்வு  நடைபெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வை.தர்மரெட்ணம், மட்டக்களப்பு மாவட்டப் பிரதம பொறியியலாளர் எம்.பத்மராஜா, நிறைவேற்றுப் பொறியியலாளர் என்.சசிநந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.பைசல் ஆகியோர் கலந்து கொண்டு  கலந்துகொண்டனர்