பொதுமக்களின் நலன் கருதி பேருந்து தரிப்பிடம்


 (லியோன்)


மட்டக்களப்பு நகருக்கு பயணிக்கும் பொதுமக்களின்  நலன் கருதி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் இஸ்டீபன் ராஜன் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் தாண்டவன்வெளி  பகுதி பிரதான வீதியில் பேருந்து தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டு பயணிகளின் பாவனைக்கு இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது .


மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் இஸ்டீபன் ராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை, , மட்டக்களப்பு மாநகர சபை  மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த பேருந்து தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டு பயணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போக்குவரத்து சபை , வீதி அபிவிருத்தி அதிகார சபை , மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ,சிவில் அமைப்புக்களின் பிரதுநிதிகளும்  கலந்துகொண்டனர்