தேசிய ரீதியில் மூன்றாவது இடம், மட்டக்களப்புக்கு.

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2018 வரிசையில் கபடிப்போட்டிகள்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளகரங்கில் கடந்த சனிக்கிழமை (09)  ஆரம்பமாகின.

இந்த சுற்றுப்போட்டி தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய மண்முணை வடக்கு ஆடவர் அணி மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

  மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு குழு A யில் களமிறங்கிய மட்டக்களப்பு  அணி அநுராதபுரம் அணியுடனான அரையிறுதி போட்டியில்  தோல்வி அடைந்தமையினால்   மூன்றாம் இடத்துக்கான தெரிவில் குழு B யில் அறையிறுதியில் தேல்வி அடைந்த கேகாலை அணியுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் 2018 வருடத்திற்கான தேசிய இளைஞர் கபடி போட்டியில் மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 08.00 மணிக்கு மஹரகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளகரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதல் மட்டக்களப்பு அணி சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்தி 66கு 41 என்ற புள்ளிக்கணக்கில் கேகாலை அணியை வீழ்த்தியது.

அந்தவகையில் மட்டக்களப்பு அணி முதலாவது சுற்றில் கொழும்பு நகர் மற்றும் வவுணியா அணிகளை வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.