“பாடு மீன்களின் சமர் ” வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது .


(லியோன்)

  பாடு மீன்களின் சமர் என வர்ணிக்கப்படும்  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிகெட் சமர் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது .


 மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான  2018 ஆண்டுக்கான   பாடு மீன்களின் “ கிரிக்கெட் சமர் சனிக்கிழமை   மிக கோலாகலமாக  ஆரம்பமானது .   

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் , மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும்  இடையில் 9வது முறையாக நடைபெறும் மாபெரும்  கிரிக்கெட்  சமர்  மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் சனி மற்றும் ஞாயிறு இரு நாட்கள் போட்டியாக  நடைபெற்றது  

இரண்டு நாள்  கொண்ட கிரிக்கெட்  சமரில் நாணய சுழற்சி  வெற்றிப்பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து   மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி  அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய . மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி   9 விக்கட்டுகளை இழந்த நிலையில் 203 ஓட்டங்களுக்கு  ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது .

இரண்டாவது நாள் துடுப்பெடுத்தாடி  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி  155 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுக்கள் இழந்த நிலையில் விளையாடிய போது நேரம் இல்லாத  காரணத்தினால் போட்டி நடுவர்களால் நிறுத்தப்பட்டது .

இரண்டு கல்லூரிக்கும் இடையில் இரண்டு நாள் போட்டியாக நடத்தப்பட்ட  2018 ஆண்டுக்கான  பாடு மீன்களின் “ கிரிக்கெட் சமர் சமநிலை  நிறைவுற்றது என அறிவிக்கப்பட்டு இரண்டு கல்லூரிகளுக்கும் 2018 ஆண்டுக்கான  பாடு மீன்களின் “ கிரிக்கெட் சமர்  கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது

இரண்டு நாட்கள் நடைபெற்ற இரண்டு கல்லூரிக்கிடையிலான கிரிகெட் சமரில் , சிறந்த பந்து வீச்சாளராக மத்திய கல்லூரி மாணவன் எம் .ஜி .  சரணும் ,சிறந்த துடுப்பாட்ட வீரராக மிக்கேல்  கல்லூரி மாணவன் எ .சனுஜன் ,சிறந்த விளையாட்டு வீரராக மிக்கேல்  கல்லூரி மாணவன்   ஆர் ருபிகரன் , கிரிகெட் சமரின் தொடர் நாயகனாக  மிக்கேல்  கல்லூரி மாணவன் எ .ஆகாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது

2018 ஆண்டுக்கான  பாடு மீன்களின் “ கிரிக்கெட் சமர்  நிகழ்வில்ஆன்மீக அதிதியாக   மெதடிஸ்த திருச்சபையின் ஆயர் மற்றும் அதிதிகளாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ கே ஜி .முத்து பண்டா , வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,  மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி எல் ஆர் . குமாரசிறி ,  மற்றும் அதிதிகளாக அருட்தந்தையர்கள் , கல்லூரி அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்