கன்னன்குடா கண்ணகிஅம்மனுக்கு வருடாந்த திருச்சடங்கு இன்று ஆரம்பம்.


(சசி துறையூர்) ஈழ மணித்திரு நாட்டின் கிழக்கிழங்கை மீன்பாடும் தேன்நாடு மட்டுமா நகரின் மேற்க்கே வாவிக்கரையோரமாக  வயல்வெளியில் புடைசூழ் கன்னன்குடா கிராமத்தில் வம்மிமர நிழலில் அமர்ந்து வேண்டுவோர்க்கு அருளாட்சி புரியும் கன்னன்குடா கண்ணகி அம்மனுக்கு வருடாந்த திருச்சடங்கு இன்று (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்.

இன்று இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி  எதிர்வரும் 28.05.2018 பின்னிரவு திருக்குளுர்த்தி பாடல் பாடப்பெற்று அம்மனுக்கு சக்கரை அமுது படையலுடன் நிறைவுபெறவுள்ளது இவ் வருடத்திற்கான திருச்சடங்கு.

அம்மனின் சடங்குகால இரவு வேளையில் வழமைபோல வடமோடி,தென்மோடி நாட்டுக்கூத்துகளும் பண்பாட்டு கலை நிகழ்வுகளும் இடம்பெறும் என ஆலய அறங்காவல் சபையினர் தெரிவிக்கின்றனர்.