நுண்கடன் குடும்பத்தை சீரளிப்பது (VIDEO & PHOTOS)


(லியோன்)

வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா 21வது குழு சிறார்களின் நுண்கடன் விழிப்பூட்டல் தெரு நாடகம் மட்டக்களபில் நடைபெற்றது


நாடு யுத்தத்தால் சூழப்பட்டிருந்த நிலையில் தனது பணியினை தமிழ், சிங்கள,முஸ்லிம் சமூகத்தினருடன் ஆரம்பித்த நாடு  தழுவிய ரீதியில் சிறார்களை மையப்படுத்தி தனது பணியினை முன்னெடுத்து, சிறார்கள் மற்றும் இளைஞர்களுடன் உணர்வு ரீதியாக, சிந்தனை ரீதியாக பயணிக்கின்ற மட்டக்களப்பு மண்ணின் வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா கடந்த 21 வருடகாலமாக சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிறுவனமாகும்

எமது எல்லைக்குள் இன மத மொழி வேறுபாடு இன்றி  எமது சிந்தனை மனித மாண்புள்ள ஆக்கபூர்வமான நல்லிணக்கமுள்ள சமநிலையான வாழ்வு வாழக்கூடிய ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் , கலைகளுக்கூடான செயற்பாடுகள்   செல்லக்கூடியவகையில் சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில்  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும்  நுண்கடன் தொடர்பாக  மட்டக்களப்பு  இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய 21வது குழு சிறார்களினால் சமூகத்திற்கு  விழிப்பூட்டலை ஏற்படுத்தும் வகையில்  நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது

இதில் திட்டமிடாமல் ஒன்றுக்கு மேல் ஒன்று என நுண்கடன் பெறுவது தமது குடும்பத்தை சீரளிப்பது மட்டுமல்லாமல் உயிரிழப்புக்களையும் கல்விப்பாதிப்பையும் ஏற்படுத்தி சிறார்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதை  வெளிக்காட்டியிருந்தனர்.

பூங்காவின் செயல் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம்  அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு எம் . ரகுபதி ,பிரதி அதிபர்  எஸ்  கிருஷாந்தன் மற்றும் விஞ்ஞான ஆசிரியர் திரு  எ சி விக்டர்  மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.