வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா



இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்று நல்விருந்து ஓம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாக கோயில் கொண்டு அடியார்கள் குறை தீர்த்து வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் வைகாசி 10ம் நாள் (24.05.2018) வியாழக்கிழமை தசமி திதியும், உத்தர நட்சத்திரமும் கூடிய சுப வேளையில் அம்பாளின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசித் திங்கள் 14ம் நாள் (28.05.2018) திங்கட்கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவுறும் என்பதை சகல அடியார்களுக்கும் அறியத்தருகின்றோம்.
உற்சவகால பூஜை நிகழ்வுகள் விபரம்
24.05.2018 வியாழக்கிழமை: திருக்கதவு திறத்தல் காவேரிகண்ட குடியினர்
25.05.2018 வெள்ளிக்கிழமை: பகல் பூஜை அத்தியா குடியினர்
25.05.2018 வெள்ளிக்கிழமை இரவுப் பூஜை புதூர்க் குடியினர்
26.05.2018 சனிக்கிழமை: பகல் பூஜை கவுத்தன் குடியினர்
26.05.2018 சனிக்கிழமை: இரவுப் பூஜை (திருக்கல்யாணம்) செட்டியார் குடியினர்
27.05.2018 ஞாயிற்றுக்கிழமை: பகல் பூஜை களுவத்தன் பனிக்கன் குடியினர்
27.05.2018 ஞாயிற்றுக்கிழமை: இரவுப் பூஜை மஞ்சள் பரமக் குடியினர்
28.05.2018 திங்கட்கிழமை: பகல் பூஜை (திருக்குளிர்த்தி) பெரிய பரமக் குடியினர்
எனவே அனைத்து பக்தகோடி பெருமக்களும் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து கண்ணகி அம்பாளின் திவ்விய திருவருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
ஆலய நிர்வாக சபையினர்.