கன்னங்குடாவில் களைகட்டிய சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா


(சசி துறையூர்) கன்னன்குடா  உதயதாரகை விளையாட்டு கழகமும்   ,  கண்ணகி இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சித்திரை விளையாட்டு போட்டி மிகச்சிறப்பான முறையில் சித்திரை வருடப்பிறப்பின் இரண்டாவது நாளில் (15/04/2018 ஞாயிற்றுக்கிழமை) உதயதாரகை விளையாட்டுக்கழக தலைவர் வே.ராகவன் தலைமையில் நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேசத்தில் பழமையான விளையாட்டுக்கழகமும்,  இளைஞர் கழகமும் இணைந்து ஆண்டுதோறும்  நடாத்தி வரும் சித்திரை புதுவருட விளையாட்டுப்போட்டி இம்முறையும் கன்னன்குடா பாடசாலை மைதானத்தில் வெகுசிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இவ் சித்திரை குதுகல நிகழ்வுக்கு
கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலயகுருக்கள்,
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ரி.நஸீர்,
பி.புலேந்திரகுமார் (அதிபர் )
முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் , முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கபோடி சசிகுமார், கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலய முகாமையாளர் வே.உருத்திரகுமார்,
கண்ணகி அம்மன் ஆலயபரிபாலன சபை முன்னால் தலைவர் அ.விமலநாதன்,
எஸ்.பவளநாதன் (ஆசிரியரும் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளரும்)
வி.ஜெயக்காந்தன் (ஆசிரியர்)
மா.பஞ்சலிங்கம் (செயலாளர் உதயதாரகை விளையாட்டுக்கழகம்)        நா.உருத்திரமூர்த்தி (அபிவிருத்தி உத்தியோகஸ்தர்)
நா.மிதுசன் (தலைவர் கண்ணகி இளைஞர் கழகம்)
எஸ்.செல்வரெட்ணம் (மீனவர் சங்கத் தலைவர் )
விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள், முன்னால் நிருவாகிகள்
என பலர் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

ஆண் பெண் இருபாலாருக்குமான மரதன்,



தோணியோட்டம்,


கபடி,



 வயது வந்தவர்களுக்கான பலுன் ஊதி உடைத்தல்



ஊசிக்கு நூல்கோர்த்தல்


போன்ற பல வேடிக்கை விநோத போட்டிகளும் நடைபெற்றது.