மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

 (சசி துறையூர்)            மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி…

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இக் கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் முதலில் மாநகரசபை ஊழியர்கள் அணியினர் துடுப்படுத்தாடினர். 05 ஓவர்கள் முடிவில் 72 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்படுத்தாடிய மாநகரசபை உறுப்பினர்கள் அணியினர் 4.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மத்திரம் இழந்து வெற்றியை ஈட்டினர்.

மாநகர சபை உறுப்பினர்கள் அணி சார்பில் வி.பூபாளராஜா, து.மதன், பு.ரூபராஜ், அ.கிருரஜன், இரா.அசோக், சுரேஸ்குமார், ராஜன் ஆகியோர் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.