மாவட்ட மட்ட ஆண் உடல் கட்டழகு தெரிவு போட்டி


(லியோன்)


44வது தேசிய மட்ட போட்டிகளுக்கு  அமைவாக கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்ட மட்ட ஆண் உடல் கட்டழகு தெரிவு போட்டி மட்டக்களப்பு இந்து கல்லூரி மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது .


மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போட்டி நிகழ்வில் நடுவர்களாக இலங்கை ஆண் உடல் கட்டழகு சம்மேளனத்தின்  நடுவர்கள் கலந்துகொண்டனர் .

மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுக்காக மாவட்ட மட்டத்தில் 14  பிரதேச செயலகங்களில் இருந்து பங்குபற்றிய போட்டியாளர்களின் தெரிவு போட்டியாக இன்று நடைபெற்றது

இந்த போட்டி நிகழ்வில் நடுவர்களாக விராஜ் தேவிந்த ,பிரேமசிறி ,ஒமேஷா லெயான் மற்றும்  விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் , மட்டக்களப்பு இந்து கல்லூரி அதிபர்  முரளிதரன்  ,மட்டக்களப்பு மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள மாநகர சபை உறுப்பினர்களான வி .பூபாலராஜா , டி .மதன் , கே .ரொனி, ஆகியோர் கலந்துகொண்டனர் .

இன்று நடத்தப்பட்ட மாவட்ட மட்ட ஆண் உடல் கட்டழகு தெரிவு போட்டியில் முதல் இடத்தினை மண்முனை வடக்கு பிரதேச செயலக போட்டியாளர் வை .டியோன் , இரண்டா இடத்தினை ஏறாவூர் பற்று பிரதேச செயலக போட்டியாளர் எம் .உசைன் ,, மூன்றாம் இடத்தினை ஆரையம்பதி பிரதேச செயலக போட்டியாளர் எ .எம் . சித்திக் பெற்றுக்கொண்டனர் .

இவர்களுக்கான பரிசில்களை நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது