ஒற்றமையுணர்வு குறைந்துவருவதாக கவலைப்படும் மட்டக்களப்பு இளைஞர் கழக தலைவி

இனங்களிடையேயான ஒற்றுமை உணர்வு இன்று குறைந்துவருவதாக மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு அக்சன் இளைஞர் கழகத்தின் (யுத் இன் அக்ஷன்)தலைவி செல்வி ஜீவராஜா ருக்ஷிக்கா தெரிவித்தார்.

இருதயபுரம் கிழக்கு அக்சன் இளைஞர் கழகத்தின் (யுத் இன் அக்ஷன்) ஏற்பாட்டில் இலங்கையின் 70வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்;டது.

70வது சுதந்திர தின நிகழ்வு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு,கல்லடி சரவணா வீதியில் உள்ள விபுலானந்தா முதியோர் இல்லத்திற்கு சென்று அக்சன் இளைஞர் கழகத்தின் தலைவி செல்வி ஜீவராஜா ருக்ஷிக்கா தலைமையிலான குழுவினர் அங்கு முதியவர்களுக்கு காலை உணவினை வழங்கி அவர்களை மகிழ்வித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த இல்லத்தின் வளாகத்தில் சிரமதான நிகழ்வொன்றினையும் நடாத்தினர்.இந்த நிகழ்வில் இருதயபுரம் கிழக்கின் கிராம சேவையாளர் திருமதி சுகந்தினியும் கலந்துகொண்டார்.

இதன்போது பற்றைக்காடாக கிடந்த குறித்த முதியோர் இல்ல வளாகம் இளைஞர் கழக உறுப்பினர்களினால் தூய்மைப்படுத்தப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ருக்ஷிக்கா,

இனங்களிடையே ஒற்றுமையுணர்வு குறைந்துசெல்வதன் காரணமாக நாங்கள் முதியவர்களுடன் இணைந்து இன்று இந்த தேசிய தின நிகழ்வினை அனுஸ்டித்தோம்.

இந்த நாட்டில் முதியவர்கள் கைவிடப்படும் நிலையினை நாங்கள் கவலையுடன் நோக்குகின்றோம்.அந்த நிலை மாற்றப்படவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.