அம்பாறையில் தமிழர்களின் மயான பூமியை அபகரிக்கமுனையும் பேராசிரியர்

அம்பாரை மாவட்டம் நிந்த{ர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டப்பளம் தமிழ் கிராமத்தின் மயான பூமியை தனியார் ஒருவர் அபகரிக்கப்பட்ட முற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் ”ர்வீகமாக வாழும் தமிழ் மக்கள் 60 வருடத்திற்கும் மேலாக தாம் பயன்படுத்திய மயானத்தை துப்பரவு செய்யும் பணியில்; ஈடுபட்டனர். இதன்போது குறித்த இடத்திற்கு பொலிசாருடன் வருகை தந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ’லிம் பேராசிரியர் ஒருவர் அப்பகுதியை கையகப்படுத்தும் நோக்கில் துப்பரவு பணியை நிறுத்த முற்பட்டுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த சம்பவத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆயினும் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த கிராம உத்தியோகத்தர் பதிலளித்து கொண்டிருக்கையில் பொலிசாருக்கு முன்னிலையிலேயே குறித்த பேராசிரியர் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்;டதாக கிராம உத்தியோகத்தரும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் வருமாறு அழைப்பு விடுத்து பொலிசார் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

அட்டப்பளம் கிராமத்தில் வாழும் 280குடும்பங்கள் தங்களது ”ர்வீக மயானபிரதேசமாக கடற்கரையை அண்டிய குறித்த பிரதேசத்தில் உள்ள 14ஏக்கர் காணி நிலப்பரப்பையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கான போதிய ஆதாரங்களாக பல வருடங்களுக்கு மேலாக இங்கு புதைக்கப்பட்டவர்களின் கல்லறைகள் இன்றும் காணப்படுவதை குறிப்பிடலாம்.

இந்நிலையில் குறித்த நபர் ஏற்கனவே 12ஏக்கருக்குரிய உரித்து தன்னிடம் இருப்பதாக தெரிவித்து மயானத்தை சுற்றி புதைகுழிக்கு மேலாக வேலியும் இட்டு மயானத்தின் மத்தியபகுதியினூடாக வீதியையும் அமைத்து வீதியை மறித்து கதவினையும் போட்டுள்ளார். இவ்வாறான நிலையில் மிகுதியான 2ஏக்கரும் அரசகாணி என கிராம உத்தியோகத்தர் அறிவித்த நிலையில் மயானமாக பயன்படுத்திய மக்கள் சிரமதான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

ஆனாலும் அதிலும் தனக்கு பங்கிருப்பதாக இன்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தகாலப்பகுதியில் குறித்த பிரச்சினை தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது மௌனம் காத்து ஏற்கனவே 12ஏக்கரினையும் இழந்த மக்கள் தற்போது மிகுதியாக உள்ள 2ஏக்கரிலும் மேலும் ஒரு பகுதியுள்ளதாக குறித்த நபர் தெரிவித்து கைப்பற்ற எத்தணித்த நிலையிலேயே ஆத்திரமடைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த நபரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் வீதியும் கட்டடங்களும் கட்டுவதற்கான பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

இவ்விடயம் தொடர்பில் கிராமத்தின் தலைவர் ரி.கோபலன் கூறுகையில் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் வாழ்வதற்கு இடம் கேட்கவில்லை. எங்களது உறவுகளின் சடலங்களை புதைப்பதற்கான எங்களுக்கு சொந்தமான இடத்தினையே கேட்கின்றோம். எங்களது உறவுகளின் சடலங்களை புதைக்கும் இடங்களை இவ்வாறு அபகரித்தால் நாங்கள் எங்கே சடலங்களை புதைப்பது என குறித்த நபரிடம் கேட்டேன். அதற்கு அவர் 280குடும்பங்களும் ஒரே நாளில் செத்தால் கூட அனைவரையும் இருக்கும் இடத்தில் புதைத்துவிடலாம் என மனச்சாட்சி இல்லாமல் கூறினார் . அப்படியானால் அனைத்து குடும்பங்களையும் ஒரே நாளில் கொல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளாரா?

“அத்தோடு மயானத்தை அபகரித்த அந்த நபர் குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க முற்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு பொலிசாருக்கு முன்னிலையிலேயே அச்சுறுத்தல் விடுக்கின்றார். அரச உத்தியோகத்தருக்கே இந்த நிலை என்றால் எங்களின் நிலை என்ன” என கேள்வி எழுப்பினார்.

“பிணங்களுக்கு மேலே வேலிகளை நட்டு நிலத்தினைஅபகரிக்கின்ற செயற்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தட்டிப்பறிக்கப்பட்ட காணிக்கு மேல் இருக்கும் எஞ்சிய காணியையும் கைப்பற்ற நினைக்கும் செயற்பாட்டினை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். இந்த செயற்பாடு இங்கு ஒற்றுமையாக வாழும் இந்து மக்களும் இஸ்லாமிய மக்களுக்கும் முரண்பாட்டை தோற்றுவிப்பதாக உள்ளது. இதனால் முற்றும் முழுதாக தமிழ் மக்கள் வெயியேற்றப்படக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே உரிய அதிகாரிகள் உடன் தலையீடு செய்து மயானத்தை மீட்டுத்தரவேண்டும்” என யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் கிராமத்தை சேர்ந்தவருமான டொக்டர் இ.ஜெயந்திரன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் த.இராஜசேகர் பின்வருமாறு விபரித்தார்.

“இந்து மக்களின் மயானத்தை தனியார் ஒருவர் அபகரிப்பதாக எனக்கு நேற்று (02)தகவல் கிடைத்தது. தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரே இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே பல சந்திப்புக்கள் இடம்பெற்று சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

இந்நிலையில் 1982ஆம் ஆண்டிற்கு முதலே குறித்த காணியை தான் வாங்கியுள்ளதாக அவரால் கூறப்பட்டது. பின்னர் பல வருடங்களாக கவனிப்பாராற்று கிடந்ததாகவும் கடந்த 6மாதத்திற்கு முதல் வேலியிட வந்தபோது மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரால் தெரிவிக்கப்பட்;டது.

அதன் அடிப்படையில் அவரால் காண்பிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம்; 12 ஏக்கருக்கு தான் வேலியிட்டிருப்பதாகவும் மிகுதியான 2 ஏக்கரினை அரசகாணி எனும் அடிப்படையில் இந்து மக்கள் மயானமாக பயன்படுத்த முடியும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிசாரும் என்னிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வந்தது.

ஆனால் நேற்றைய தினம் குறித்தொதுக்கப்பட்ட மயானத்தை மக்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது குறித்த இடத்திற்கு வந்த நபர் தமிழ் மக்களுக்கு எவ்வித காணியும் இங்கு இல்லை என குறிப்பிட்டு தடை விதித்தார். மீண்டும் அவர் இன்று எல்லை இட வந்தபோது மக்கள் அதனை தடுத்து இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருமாறு என்னை அழைத்திருந்தனர்.

அதேவேளை சம்மாந்துறை பொலிசாரும் வருகை தந்து விடயங்கள் குறித்து ஆராய முற்படும் போதே குறித்த நபர் தனது கல்வி நிலைக்கு அப்பால் மிகவும் கேவலமான முறையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார்.

அத்தோடு அரச அதிகாரியான என்னை பொலிசாருக்கு முன்னிலையிலே அச்சுறுத்தியும் சென்றுள்ளார். இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இங்கு கடடையாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பில் இன்று பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளேன்.

இச்சந்தர்ப்பத்தில் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உரிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனவும் அதுவரையில் யாரும் குறித்த நிலப்பரப்பிற்குள் செல்ல கூடாது என அறிவுறுத்தல் வழங்குமாறும் பொலிசாரை நான் கேட்டுள்ளேன் எனவும் கிராம உத்தியோகத்தர் த.இராஜசேகர் தெரிவித்தார்.