கலைமகள் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட் கரப்பந்தாட்ட மைதான நிர்மாண வேலைத்திட்டம் மாவட்ட ரீதியாக இரண்டாமிடம்.

(சசி துறையூர் ) கலைமகள் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட் கரப்பந்தாட்ட மைதான நிர்மாண வேலைத்திட்டம் மாவட்ட ரீதியாக இரண்டாமிடம்.

முல்லைத்தீவு மாவட்டம்,  மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவு, செல்வபுரம் கிராம சேவையாளர் பிரிவு,  கலைமகள் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட  கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கும் வேலைத்திட்டம் மாவட்ட ரீதியாக இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளதாக பிரதேச இளைஞர் சேவை அலுவலர் அந்தோணிமுத்து ஜெயாலன் எமது செய்தி பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன இணைந்து இளைஞர் கழகங்களினூடாக ரூபா 150000.00 நிதி ஒதுக்கீட்டில்  ரூபா 300000.00 மேற்பட்ட நிதிப் பெறுமதியான 3500 வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 29 வேலைத்திட்டங்களில் கலைமகள் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதான நிர்மாணிப்பு வேலைத்திட்டம் இரண்டாவது இடத்தினை பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியாக முதல் மூன்று இடங்களை பெறும் வேலைத்திட்டங்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.