மட்டு - இந்து கல்லூரி மாணவர்களின் சித்திரக் கைப்பணி கண்காட்சி

(லியோன் )

மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்களின் சித்திரக் கைப்பணி  கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்களின் சித்திரக் கைப்பணி  கண்காட்சி கல்லூரி சித்திரப்பாட ஆசிரியர் நடராஜா இன்பமலர் ஒழுங்கமைப்பில் கல்லூரி அதிபர் எஸ் டி முரளிதரன் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது . 
 இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே . அருள்பிரகாசம் , மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக (சித்திரம் ) ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டு கண் காட்சியினை ஆரம்பித்து வைத்தனர் .

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர் , தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் நடைபெற்றன .

இக் கண்காட்சி நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் இடம்பெற்ற  ஆக்கங்கள் அனைத்தும் மாணவர்களின் ஆக்க திறன்களை வெளிபடுத்தும் வகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது