வறுமை ஒழிப்பு , நிதி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

(லியோன்)

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக வறுமை ஒழிப்பு, போசாக்கு தன்மையை மேம்படுத்தல் மற்றும் நிதி முகாமைத்துவம்  தொடர்பான வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட வேண்டிய வறுமை ஒழிப்பு, போசாக்கு தன்மையை மேம்படுத்தல் மற்றும் நிதி முகாமைத்துவம்  வேலைத்திட்டங்கள் தொடர்பாக  பிரதேச செயலக  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று  மட்டக்களப்பில்  நடைபெற்றது

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ஜதிஸ்குமார் ஒழுங்கமைப்பில் பிரதேச  செயலாளர்  கே .குணநாதன்  தலைமையில்  செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

இந்த செயலமர்வில் ஆலோசகராக  பிரதேச செயலக  கணக்காளர் கே ,ஜெகதிஸ் வரன் கலந்துகொண்டு  வறுமை ஒழிப்பு, போசாக்கு தன்மையை மேம்படுத்தல் மற்றும் நிதி முகாமைத்துவம்  தொடர்பான ஆலோசனைகளை வழிகாட்டல்களை  வழங்கினார் .

இந்த செயலமர்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்