(லியோன்)
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு கல்லூரி அதிபர் கா.அருமைராசா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் (02) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக
அதிதிகளை மாணவர்களினால் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு பிரதாம மண்டபத்திற்கு
அழைத்து வரப்பட்டனர் .இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது
கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு
தின நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை
மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர்
தர பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற
மாணவர்களையும் , சிறந்த பெறுபேறுகளை
பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் கௌரவித்து பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
.
இந்நிகழ்வில் ஒய்வு பெற்று
சென்றுள்ள மண்முன வடக்கு கோட்டக்கல்விப்
பணிப்பாளர் , ஆசிரியர்கள் ,அதிபர்களை கௌரவித்து நினைவு சின்னங்கள்
வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன்
கலந்துகொண்டார்
இந்நிகழ்வில் ,
சிறப்பு விருந்தினர்களாக கல்வி திணைக்கள
அதிகாரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி
குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்


































