சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி

(லியோன்)

சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் ஏற்பாடு செய்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு (05)  நடைபெற்றது.




கல்லடி  வேலூர் சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி தேவரஞ்சனி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு  காத்தான்குடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம் எஸ் எம் . ஜாபிர் அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இலங்கை  போக்குவரத்து அதிகார சபை உதவி பணிப்பாளர் உருத்திர மூர்த்தி யுவநாதன், உதயம் விழிப்புணர்வு அற்ற முன்னாள் சங்க தலைவர் பெரிய சாமி செல்வநாதன் ,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் இயங்கிவரும் உள,சமூக உதவிக்குழுவினரால் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக மனநல மேம்பாட்டிற்கான செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் , வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் உபகரணங்களும் ,பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும்   வழங்கி வைக்கப்பட்டது.


அத்துடன் சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தினால் சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன